தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்தியால்பேட்டை கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

முத்தியால்பேட்டை கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

முத்தியால்பேட்டை கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி


ADDED : நவ 07, 2024 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 163ம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் விழா கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி, சுவாமிக்கு தினமும் காலை சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு பல்வேறு உற்சவத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 5ம் நாளான நேற்று முருகர் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 8:00 மணிக்கு சிங்க முகா சூரன் புறப்பாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு இந்திரஞால தங்கரதம் வேல் வாங்குதல் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மதியம் 2:00 மணிக்கு சூரபத்மன் பட்டணம் புறப்பாடு, இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

நாளை காலை 10:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், 12ம் தேதி மாலை 5:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us