/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ஜனாதிபதி வருகை: டி.ஜி.பி., ஆலோசனை
/
துணை ஜனாதிபதி வருகை: டி.ஜி.பி., ஆலோசனை
ADDED : ஜன 26, 2024 05:25 AM

புதுச்சேரி : புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகையை யொட்டி, காவல்துறை தலைமையகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
போலீஸ் டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் நாரா சைதன்யா, சுவாதி சிங், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் புதுச்சேரிக்கு 28ம் தேதி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வருகையொட்டி, விமான நிலையம், காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகம், தங்குமிடம் ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிகைகள் எடுக்க வேண்டும். மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடவும், கடலோர பகுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

