/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தன்னார்வலர் கூட்டமைப்பு திருவள்ளுவர் தின விழா
/
தன்னார்வலர் கூட்டமைப்பு திருவள்ளுவர் தின விழா
ADDED : ஜன 17, 2024 12:51 AM

வில்லியனுார்  : கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தன்னார்வலர் கூட்டமைபு சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வில்லியனுார் பகுதி தன்னார்வலர்  கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆய்வறிஞர் புலவர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சுப்புதேவராசு, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் சுதர்சன், தன்னாளர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி, நிர்வாகிகள் சண்முகம், பொறியாளர்கள் அருணகிரி மற்றும் ஜெயராமன், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம்,  ஜானகிராமன், சேகர்,  செல்வலிங்கம், இரிசப்பன், ஆனந்தபாஸ்கர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

