/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நடைபயணம்
/
காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நடைபயணம்
ADDED : செப் 29, 2025 02:59 AM

புதுச்சேரி:புதுச்சேரி கடற்கரை சாலையில், காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, பாண்டி யாத்ரா நடைபயணத்தை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி மற்றும் உலக காந்தி மையம் சார்பில் காந்தி வேடம் அணிந்த 156 மாணவர்களின் 'பாண்டி யாத்ரா' நடைபயணம் கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே நேற்று நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன் க லந்து கொண்டு மாணவர்களின் நடைபயணத்தை கொடியசை த்து துவக்கி வைத்தார். முன்னதாக, காந்தி உருவ சிலைக்கு மலர் துாவி மரியா தை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், காந்தி வாழ்ந்த வாழ்க் கை மிகவும் எளிமையானது. ஆனால், அவருடைய பெருமை மிகவும் வலிமையானது. அன்பு மற்றும் அமைதியால் உலகத்தை வென்றார். அவருடைய மூன்று முக்கியமான கொள்கைகள் உண்மை, அஹிம்சை, எளிமை.
இன்று காந்தி வேடமிட்டு நிற்பது, ஒரு அழகான நிகழ்ச்சி மட்டுமல்ல. 'நானும் காந்தியைப் போல உண்மையுடன், அன்புடன், எளிமையுடன் வாழ்வேன் என மனதில் உறுதி கொள்ளுங்கள் என்றார்.

