/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்துறை அமைச்சரை சந்தித்தது ஏன்? கவர்னர் தமிழிசை விளக்கம்
/
உள்துறை அமைச்சரை சந்தித்தது ஏன்? கவர்னர் தமிழிசை விளக்கம்
உள்துறை அமைச்சரை சந்தித்தது ஏன்? கவர்னர் தமிழிசை விளக்கம்
உள்துறை அமைச்சரை சந்தித்தது ஏன்? கவர்னர் தமிழிசை விளக்கம்
ADDED : பிப் 06, 2024 05:39 AM
புதுச்சேரி, : புதுச்சேரி வளர்ச்சிக்காகவே உள்துறை அமைச்சரை சந்தித்தேன் என கவர்னர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும், தெலுங்கானா மாநில வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும் டில்லியில் சந்தித்தேன்.
புதுச்சேரிக்கு வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வர வேண்டும். ஐந்து விழுக்காடாக இருக்கின்ற மத்திய உதவியை 10 விழுக்காடாக உயர்த்தித் தர வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்திற்கு உதவி செய்ய வேண்டும் போன்ற திட்டங்கள் குறித்து பேசினேன்.
இதற்கிடையில், நான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக தகவல் பரப்பி இருக்கின்றனர். நான் டில்லியில் இருந்து புதுச்சேரி வந்து சேர இரவு 11 மணி ஆனது. காலை 10:30 மணிக்கு, திட்டமிட்டபடி நான் காரைக்கால் சென்றேன்.
ஆனால், நான் வேறு ஏதோ ஒரு முயற்சிக்காக கவர்னர் மாளிகையில் காத்திருந்ததாக கற்பனை தகவல்களை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.