ADDED : பிப் 02, 2024 03:46 AM
புதுச்சேரி: சூரமங்கலம், கல்யாணம் மண்டபம் வீதியைச் சேர்ந்தவர் நீதிபதி, 38; டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
கடந்த 27ம் தேதி நீதிபதி குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மனைவி சிவகங்கை கண்டித்தார். அதற்கு நீதிபதி இனிமேல் குடிக்க மாட்டேன் என, சத்தியம் செய்துள்ளார்.
கடந்த 31ம் தேதி இரவு புதுச்சேரிக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவி சிவகங்கை போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது நீதபதி குடிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரை வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். இந்நிலையில் நீதிபதி மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் உள்ள வேப்பமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

