ADDED : ஜன 10, 2024 12:42 AM
திருவெண்ணெய்நல்லுார் : குடும்பத் தகராறில் தீக்குளித்து மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மணக்குப்பம், புதுகாலனியை சேர்ந்தவர் மணிகண்டன், 35; இவரது மனைவி அம்பிகா, 30; திருமணமாக 10 ஆண்டாகும் இவர்களுக்கு ஜெசிகா, 7; என்ற மகளும், தருண், 4; என்ற மகனும் உள்ளனர்.
தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதன்படி கடந்த 2ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில், மனமுடைந்த அம்பிகா மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.
ஆபத்தான நிலையில் சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்பிகா நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, அம்பிகாவை தற்கொலைக்கு துாண்டிய கணவர் மணிகண்டனை கைது செய்தனர்.

