/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு சட்ட விரோத பேனர்கள் மீதும் வழக்கு பாயுமா?

ADDED : ஜன 28, 2024 04:26 AM
கடந்த 2 நாட்களுக்கு முன், ரவுடி அஸ்வினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவரது கூட்டாளிகள் போஸ்டர்கள் அச்சடித்து அரியாங்குப்பம் முழுதும் ஒட்டினர்.
போஸ்டர் ஒட்டிய அரவிந்த், ஜான், விஜய், சுபாஷ், பிரகாஷ் ஆகியோர் மீது அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் தலைமையிலான போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி நகரின் அழகு சீர்குலைவு தடுப்பு சட்டம் - 2000ன் 5 பிரிவுகளின் கீழ் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்த அரியாங்குப்பம் போலீசாருக்கு பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாராட்டுகளை சமூக வலைதளங்களில் குவித்து வருகின்றனர்.
புதுச்சேரியின் அழகை சீர்குலைக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க மட்டுமல்லாமல், பேனர்கள் வைப்பதை தடுக்கவும் சேர்த்தே 'புதுச்சேரி நகரின் அழகு சீர்குலைவு தடுப்பு சட்டம் - 2000' கொண்டு வரப்பட்டது. ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
அரியாங்குப்பம் போலீசாரை பின்பற்றி, மற்ற போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சட்ட விரோத பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். புதுச்சேரியின் அழகை பாதுகாக்கவும், பொதுமக்களை பாதுகாக்கவும் போலீசாருக்கு, உயரதிகாரிகள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.