தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மணக்குள விநாயகர் கல்லுாரி ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி

மணக்குள விநாயகர் கல்லுாரி ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி

மணக்குள விநாயகர் கல்லுாரி ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி


ADDED : ஜன 18, 2024 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2024 03:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றனர்.

சர்வதேச அளவில் கோரே ஏ.ஐ., இயங்கு தளம் உரையாடல் சாட்போட்களை உருவாக்க உதவுகிறது. 2014ல் புளோரிடாவின் ஆர்லாண்டோவில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகத்தில் நவம்பரில் உலகளாவிய ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.

அதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு முதல் இடம் பெற்றது.

கல்லுாரி மாணவர்களின் சிறப்புப் பிரிவில் முதல் இடத்தை பெற்றதற்காக ரூ.4.80 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

இதே அமைப்பு ஆகஸ்ட் மாதம் மற்றொரு உலகளாவிய ஹேக்கத்தானை நடத்தியது. மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவிகள் காயத்ரி, திரிஷா, நிவேதா, அர்ச்சனா தேவி ஆகியோர் முதல் இடம் பிடித்தனர். அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.90 லட்சம் வழங்கப்பட்டது.

அதே போட்டியில், ஆதிப் அஹமத், ராகுல், முகமது பெரோஸ், சந்திர குமார் மற்றும் பெரோன் ஆரோக்கியம் ஆகியோர் கொண்ட மற்றொரு குழு இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அவர்களுக்கு 82 ஆயிரத்து 900 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

சாதித்த மாணவர்களை நிர்வாக இயக்குனர் தனசேகரன், முதல்வர் வெங்கடாசலபதி, டீன்கள், துறைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us