/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பெண்கள் பாதுகாப்பு மாநாடு
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பெண்கள் பாதுகாப்பு மாநாடு
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பெண்கள் பாதுகாப்பு மாநாடு
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பெண்கள் பாதுகாப்பு மாநாடு
ADDED : ஜூன் 01, 2025 11:45 PM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த மாநாடு நடந்தது.
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி அங்கீகார தரவு மேலாண்மை அமைப்பு சார்பில் கடந்த 'பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இன்று பெண்கள் பணியிடங்களில் பாதுகாப்பானவர்களா' என்ற தலைப்பில் மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் வரதட்சணை தடை ஆலோசனை வாரிய தலைவர் வித்யாராம்குமார், வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, மருத்துவ கல்லுாரி இயக்குனர் இரத்தினசாமி மற்றும் கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
மாநாட்டில் வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தை சேர்ந்த கல்லுாரி பயிற்சி டாக்டர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர், உடற்பயிற்சியாளர்கள், பாரா மெடிக்கல் மாணவர்கள், பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அங்கீகார தரவு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் லதா மற்றும் உள் புகார் குழு பரதலட்சுமி ஆகியோர் செய்தனர்.