Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி


ADDED : ஆக 04, 2025 11:01 PM

Follow on Google

ADDED : ஆக 04, 2025 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் சாலையோரம் நடந்து சென்ற கூலி தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு மேற்கு வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் முருகேசன், 65; கூலி தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி இரவு அய்யனாரப்பன் கோவில் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவ்வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முருகேசன் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது.

படுகாயமடைந்த முருகேசனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். .

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap