நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் பேட், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி 64; கூலி தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால், பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுப்ரமணி அங்குள்ள மா மரத்தில் துாக்குப்போட்டுக் கொண்டார். உடன் அவரை மீட்டு, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.