/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமுதாய கல்லுாரியில் விண்ணப்பிக்கலாம்
/
சமுதாய கல்லுாரியில் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 23, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சமுதாய கல்லுாரியில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் 21 வகையான டிப்ளமோ, டிகிரி படிப்புகள் உள்ளன. காலத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்பு அள்ளி தரும் இப்படிப்புகளில் சேர கடந்த மே 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இப்படிப்புகளில் சேர ஜூன் 19ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கை ஏற்று இம்மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, புதுச்சேரி பல்கலைக்கழகம் கால கெடு அளித்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு http://pucc.edu.in என்ற இணைய முகவரியை பார்க்கவும்.