ADDED : ஆக 18, 2025 11:41 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் நாகூர் மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கீழவாஞ்சூர் பஸ் ஸ்டேண்ட் அருகில் குடிபோதையில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர் திட்டச்சேரி கீழகொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த அழகேந்திரன்,24; எனத் தெரியவந்தது.
புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.





