sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...

/

இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...


ADDED : மே 27, 2025 11:16 PM

Google News

ADDED : மே 27, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, பிரனாய் வெற்றி பெற்றனர்.

சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, கனடாவின் வென் யு ஜங்கை சந்தித்தார். சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா, முதல் செட்டை (21-14) வென்ற போதும், பின் 21-14, 18-21, 11-21 என தாய்லாந்தின் சுபனிதாவிடம் தோல்வியடைந்தார்.

இந்தியாவின் அன்மோல் கார்ப், 11-21, 22-24 என சீனாவின் சென்னிடம் தோற்றார்.

பிரனாய் வெற்றி

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், டென்மார்க்கின் முன்னணி வீரர் ராஸ்மஸ் கெம்கேயை, 19-21, 21=16, 21-14 என போராடி வீழ்த்தினார். இந்தியாவின் பிரியான்ஷு, 21-14, 10-21, 14-21 என ஜப்பானின் நரவோகாவிடம் வீழ்ந்தார்.

கிரண் ஜார்ஜ் 19-21, 17-21 என சீனாவின் வெங் ஹாங்கிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா ஜோடி 18-21, 13-21 என சீனாவின் செங் ஜிங், ஜங் சி ஜோடியிடம் வீழ்ந்தது.






      Dinamalar
      Follow us