/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
கனடா பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்
/
கனடா பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்
ADDED : ஜூலை 04, 2025 10:56 PM

கால்கரி: கனடா ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர், ஸ்ரீயான்ஷி முன்னேறினர்.
கனடாவில், 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனதைபேயின் போ-வெய் வாங் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி 21-19, 21-14 என சீனதைபேயின் யு காய் ஹுவாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷி, மலேசியாவின் கருப்பதேவன் லெட்ஷானா மோதினர். இதில் அசத்திய பிரியான்ஷி 21-15, 21-14 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.