/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இந்தியாவுக்கு மூன்று தங்கம்: உலக 'பாரா' பாட்மின்டனில்
/
இந்தியாவுக்கு மூன்று தங்கம்: உலக 'பாரா' பாட்மின்டனில்
இந்தியாவுக்கு மூன்று தங்கம்: உலக 'பாரா' பாட்மின்டனில்
இந்தியாவுக்கு மூன்று தங்கம்: உலக 'பாரா' பாட்மின்டனில்
ADDED : பிப் 25, 2024 09:00 PM

பட்டயா: உலக 'பாரா' பாட்மின்டனில் இந்தியாவின் பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர், சுஹாஸ் யதிராஜ் தங்கம் வென்றனர்.
தாய்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 3' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், இங்கிலாந்தின் டேனியல் பெத்தேல் மோதினர். இதில் பிரமோத் பகத் 14-21, 21-15, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது, இம்முறை இவர் வென்ற 3வது பதக்கம். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் (ஜோடி: சுகந்த் கடம்), கலப்பு இரட்டையரில் (ஜோடி: மணிஷா) வெண்கலம் வென்றிருந்தார். தவிர இவர், உலக 'பாரா' பாட்மின்டனில் 6 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 14 பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு பைனலில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் 21-18, 21-18 என இந்தோனேஷியாவின் பிரெடி செடியவானை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எச். 6' பிரிவு பைனலில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 22-20, 22-20 என சீனாவின் லின் நைலியை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார். தவிர இது, உலக 'பாரா' பாட்மின்டனில் இவர் வென்ற 4வது பதக்கம். ஏற்கனவே ஒரு வெள்ளி (2019), இரண்டு வெண்கலம் (2019, 2022) வென்றிருந்தார்.
மற்ற இந்திய நட்சத்திரங்களான மணிஷா (பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு. 5'), சிராக் பரேதா-ராஜ் குமார் (ஆண்கள் இரட்டையர் 'எஸ்.யு.5'), நித்யா ஸ்ரீ சுமதி சிவன்-ரச்சனா (பெண்கள் இரட்டையர் 'எஸ்.எச். 6'), மானசி ஜோசி-துளசிமதி (பெண்கள் இரட்டையர் 'எஸ்.எல். 3' - 'எஸ்.எல். 5') தலா ஒரு வெள்ளி வென்றனர்.
இம்முறை இந்தியாவுக்கு 3 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் என 18 பதக்கம் கிடைத்தது.