sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்திய அணிக்கு இன்னொரு 'அடி': தொடரை பரிதாபமாக இழந்தது

/

இந்திய அணிக்கு இன்னொரு 'அடி': தொடரை பரிதாபமாக இழந்தது

இந்திய அணிக்கு இன்னொரு 'அடி': தொடரை பரிதாபமாக இழந்தது

இந்திய அணிக்கு இன்னொரு 'அடி': தொடரை பரிதாபமாக இழந்தது


UPDATED : அக் 24, 2025 12:07 AM

ADDED : அக் 23, 2025 11:59 PM

Google News

UPDATED : அக் 24, 2025 12:07 AM ADDED : அக் 23, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிலெய்டு: அடிலெய்டு ஒருநாள் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடரை 2-0 என இழந்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் பிலிப், எல்லிஸ் நீக்கப்பட்டு, அலெக்ஸ் கேரி, சேவியர் பார்ட்லட் இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

மந்தமான துவக்கம்: இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. பார்ட்லட் ஓவரின் முதல் பந்தில் (6.1) கேப்டன் சுப்மன் கில் (9) அவுட்டானார். 5வது பந்தில் 'சீனியர்' கோலி 'டக்' அவுட்டாக, 7 ஓவரில் 17/2 ரன் எடுத்து தவித்தது. பின் ரோகித் சர்மா, ஷ்ரேயஸ் போராடினர். 3வது விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்தனர். இழந்த 'பார்மை' மீட்கும் முயற்சியில் இருந்த ரோகித் மிக கவனமாக ஆடினர். முதல் 20 பந்துகளில் 6 ரன் தான் எடுத்தார். ஹேசல்வுட் பந்தில் 17 'டாட் பால் விட்டுக் கொடுத்தார். 10 ஓவரில் இந்தியா 29/2 ரன் தான் எடுத்தது. பின் ஓவன் ஓவரில் (19வது) ரோகித் 2 சிக்சர், ஷ்ரேயஸ் ஒரு பவுண்டரி அடிக்க, ஸ்கோர் மெல்ல உயர துவங்கியது. ரோகித், 74 பந்தில் ஒருநாள் அரங்கில் 59வது அரைசதம் எட்டினார். மறுபக்கம் ஷ்ரேயஸ் 29வது அரைசதம் அடித்தார். ஸ்டார்க் 'வேகத்தில்' ரோகித் (73, 7x4, 2x6) வெளியேறினார்.



ஜாம்பா ஜாலம்: ஜாம்பா 'சுழலில்' ஷ்ரேயஸ் (61, 7x4) சிக்கினார். தொடர்ந்து அசத்திய ஜாம்பா பந்தில் ராகுல் (11) போல்டானார். வாஷிங்டன் (12) நிலைக்கவில்லை. ஜாம்பா ஓவரில் (45வது) அக்சர் படேல் (44), நிதிஷ் குமார் (8) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் ஹர்ஷித் ராணா (24*) அர்ஷ்தீப் சிங் (13) கைகொடுத்தனர். 9வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தனர். இந்திய அணி 50 ஓவரில் 264/9 ரன் எடுத்தது.

எடுபடாத பந்துவீச்சு: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ் (11) நிலைக்கவில்லை. ஹர்ஷித் பந்தில் 'ஆபத்தான' டிராவிஸ் ஹெட் (28) அவுட்டாக, 12.2 ஓவரில் 54/2 ரன் எடுத்து தவித்தது. பின் மாத்யூ ஷார்ட், மாட் ரென்ஷா அணியை மீட்டனர். இவர்களை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரென்ஷா, 30 ரன்னுக்கு வெளியேறினார். ஷார்ட், 48 பந்தில் அரைசதம் எட்டினார். அலெக்ஸ் கேரி (9) ஏமாற்றினார். ஹர்ஷித் பந்தில் ஷார்ட் (74, 4x4, 2x6) அவுட்டானார்.

பின் மிட்சல் ஓவன், கூப்பர் கொனாலி சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். ஓவன், 36 ரன் எடுத்தார். கொனாலி அரைசதம் கடந்தார். வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங் 'வைடு' வீசி உதவ, ஆஸ்திரேலிய அணி 46.2 ஓவரில் 265/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கொனாலி (63, 5x4, 1x6) அவுட்டாகாமல் இருந்தார்.

மூன்றாவது ஒருநாள் போட்டி அக். 25ல் கான்பராவில் நடக்க உள்ளது.



ஓய்வு நோக்கி கோலி

ஒரு நாள் அரங்கில் கோலி முதன்முறையாக தொடர்ந்து இரு போட்டிகளில் 'டக்' அவுட்டானார். இந்த சோகத்தில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு வெளியேறினார். இது விரைவில் ஓய்வை அறிவிக்க உள்ளார் என்பதை உணர்த்தியது.

1000 ரன்

ஒருநாள் அரங்கில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 1000 ரன் எட்டிய முதல் இந்திய வீரரானார் ரோகித். 21 போட்டிகளில் 4 சதம், 3 அரைசதம் உட்பட 1071 ரன் எடுத்துள்ளார்.

'பீல்டிங்' மோசம்

இந்திய தோல்விக்கு 'கேட்ச்' நழுவவிட்டது முக்கிய காரணம். ஹெட் (7 ரன்னில்) அடித்த பந்தை நிதிஷ் குமார், இரு முறை ஷார்ட் (23, 55 ரன்னில்) கொடுத்த 'கேட்ச்சை' முறையே அக்சர் படேல், சிராஜ் கோட்டைவிட்டனர். இதில் ஹெட் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், ஷார்ட் 74 ரன் விளாசி, சிக்கல் தந்தார். இது பற்றி கேப்டன் சுப்மன் கூறுகையில்,''இந்திய அணி போதுமான ஸ்கோர் எடுத்தது. சில 'கேட்ச்' வாய்ப்புளை வீணாக்கும் போது மீண்டு வருவது கடினம்,''என்றார்.

எங்கே குல்தீப்

ஆஸ்திரேலிய 'ஸ்பின்னர்' ஜாம்பா, 4 விக்கெட் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால், இந்திய அணியில் மணிக்கட்டு 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு அளிக்காமல் அதிர்ச்சி அளித்தனர். மாறாக 'ரன் வள்ளல்' ஹர்ஷித் ராணாவுக்கு (8 ஓவர், 59/2) தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது புரியாத புதிராக உள்ளது.



150 சிக்சர்

'சேனா' நாடுகளில் (தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) விளையாடிய சர்வதேச போட்டிகளில் 150 சிக்சர் விளாசிய முதல் ஆசிய வீரரானார் ரோகித். இதுவரை 156 போட்டியில், 151 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us