/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலி, ருதுராஜ் சதம் * 358 ரன் குவித்தது இந்தியா
/
கோலி, ருதுராஜ் சதம் * 358 ரன் குவித்தது இந்தியா
UPDATED : டிச 03, 2025 05:27 PM
ADDED : டிச 02, 2025 11:08 PM

ராய்ப்பூர்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் ருதுராஜ், கோலி சதம் கைகொடுக்க இந்திய அணி, 50 ஓவரில் 358/5 ரன் குவித்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் பவுமா, பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்திய அணிக்கு ரோகித் (14), ஜெயஸ்வால் (22) ஜோடி துவக்கம் தந்தது. கோலி (102), ருதுராஜ் (105) என இருவரும் சதம் அடித்தனர். வாஷிங்டன் (1) ரன் அவுட்டானார்.
இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 358 ரன் குவித்தது. ராகுல் (66), ஜடேஜா (24) அவுட்டாகாமல் இருந்தனர்.

