உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 07, 2026 11:28 PM

அ நிறம் | அளவு
சிட்னி: அளவுக்கு அதிகமாக மது குடித்து வாகனம் ஓட்டிய வார்னர் கைது செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணி முன்னாள் துவக்க வீரர் டேவிட் வார்னர் 39. நேற்று சிட்னியில் உள்ள மலபார் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள சோதனை மையத்திற்கு சற்று தொலைவில் இவரது கார் நின்றது. அங்கு சென்ற போலீசார், வார்னருக்கு சுவாச சோதனை நடத்தினர்.இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு அதிகமாக, மது குடித்திருந்தது உறுதியானது. உடனடியாக கைது செய்யப்பட்ட இவரை, மரவுப்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அங்கு மீண்டும் சோதனை நடந்தது. பின் அவர் விடுவிக்கப்பட்டார். வரும் மே 7ல் நீதிமன்றத்தில் வார்னர் ஆஜராக வேண்டும்.
