/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பரீட்சைக்கு நேரமாச்சு சுப்மன் கில்: இங்கிலாந்து தொடருக்கு 'ரெடி'
/
பரீட்சைக்கு நேரமாச்சு சுப்மன் கில்: இங்கிலாந்து தொடருக்கு 'ரெடி'
பரீட்சைக்கு நேரமாச்சு சுப்மன் கில்: இங்கிலாந்து தொடருக்கு 'ரெடி'
பரீட்சைக்கு நேரமாச்சு சுப்மன் கில்: இங்கிலாந்து தொடருக்கு 'ரெடி'
ADDED : ஜூன் 01, 2025 11:57 PM

புதுடில்லி: ''இங்கிலாந்து டெஸ்ட் தொடர் கேப்டன் சுப்மன் கில்லுக்கு பரீட்சை போன்றது. இதில் சாதிக்க தயாராக உள்ளார்.''என சபா கரிம் தெரிவித்தார்.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20-ஆக.4) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் (லீட்ஸ்), ஜூன் 20ல் துவங்குகிறது. இந்திய அணி கேப்டனாக இளம் சுப்மன் கில் 25, களமிறங்க உள்ளார். ரோகித், கோலி, அஷ்வின், ஷமி போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில், இத்தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும்.
சுப்மனை பொறுத்தவரை 32 டெஸ்டில் 5 சதம் உட்பட 1,893 ரன் (சராசரி 35.05) எடுத்துள்ளார். இம்முறை பிரிமியர் தொடரில் குஜராத் கேப்டனாக அசத்தினார். 15 போட்டியில் 650 ரன் குவித்தார். இவருடன் துவக்கத்தில் மிரட்டிய சாய் சுதர்சன், 759 ரன் (15 போட்டி) எடுத்தார். இதே போல கருண் நாயரும் நல்ல 'பார்மில்' உள்ளார். ராகுல், ஜடேஜா கைகொடுத்தால், இங்கிலாந்து மண்ணில் இந்தியா சாதிக்கலாம்.
கருண் அனுபவம்: இது பற்றி இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர், கீப்பர்-பேட்டர் சபா கரிம் கூறியது: சுப்மன் கில்லுக்கு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பேட்டிங் நுணுக்கத்தில் கைதேர்ந்த இவர், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இங்கிலாந்து தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால், கேப்டன் பதவியில் தானாகவே பிரகாசிப்பார். இத்தொடர் பரீட்சை போன்றது. சவாலை சந்திக்க தயாராக இருப்பார் என நம்புகிறேன்.
சுதர்சன் நம்பிக்கை: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார். இவரது அனுபவம் அணிக்கு கைகொடுக்கும். மூன்றுவித கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய வீரராக தமிழகத்தின் சாய் சுதர்சன் உருவெடுத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்திய 'பேட்டிங்' கூட்டணியின் செயல்பாட்டை காண ஆர்வமாக உள்ளேன்.
இவ்வாறு சபா கரிம் கூறினார்.