sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்தியாவின் கூட்டணி கணக்கு என்ன... * யார் உள்ளே...யார் வெளியே

/

இந்தியாவின் கூட்டணி கணக்கு என்ன... * யார் உள்ளே...யார் வெளியே

இந்தியாவின் கூட்டணி கணக்கு என்ன... * யார் உள்ளே...யார் வெளியே

இந்தியாவின் கூட்டணி கணக்கு என்ன... * யார் உள்ளே...யார் வெளியே


ADDED : ஜன 30, 2024 11:18 PM

Google News

ADDED : ஜன 30, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விசாகப்பட்டனம்: கோலி, ராகுல், ஜடேஜா இடம்பெறாத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். துவக்க கூட்டணி மாறுமா, நான்கு 'ஸ்பின்னர்'களுடன் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில்நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் பிப். 2ல் விசாகப்பட்டனத்தில் நடக்க உள்ளது. இப்போட்டி துவங்குவதற்கு முன்பே இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடை பகுதி காயத்தால் முன்னணி வீரர்களான ராகுல், 'ஆல்-ரவுண்டர்' ஜடேஜா விலகினர். ஏற்கனவே தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகினார். இதனால், விளையாடும் 'லெவன்' அணியை தேர்வு செய்வதில் 'தலைவலி' ஏற்பட்டுள்ளது.

விசாகப்பட்டின மைதான ஆடுகளத்தை பொறுத்தவரை 'ஸ்பின்னர்'களுக்கு கைகொடுக்கும். பேட்டர்கள் சாதிக்கலாம். இங்கு 2019ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் மயங்க் அகர்வால்(215), ரோகித் சர்மா(176) விளாச, இந்திய அணி முதல் இன்னிங்சில் 502 ரன் குவித்தது. பின் அஷ்வின் 7, ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்த, இந்தியா வென்றது. இதனை மனதில் வைத்து இம்முறை அணியை தேர்வு செய்ய வேண்டும். உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழியும் சர்பராஸ் கான், ரஜத் படிதர், மணிக்கட்டு 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவ், பேட்டிங் திறன் பெற்ற சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், சவுரப் குமார் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

முந்தும் குல்தீப்



கடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு 'வேகம்', நான்கு 'ஸ்பின்னர்'களுடன் களமிறங்கி வெற்றி பெற்றது. இதே திட்டத்தை இந்தியாவும் பின்பற்றலாம். பும்ராவை தக்க வைத்துக் கொண்டு, சிராஜை நீக்கலாம். குல்தீப், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் என நான்கு 'ஸ்பின்னர்'களை சேர்க்கலாம்.

இது குறித்து இந்திய 'சுழல்' ஜாம்பவான கும்ளே கூறுகையில்,''ஒரு வேகப்பந்துவீச்சாளர் போதும் என முடிவு செய்தால், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு அளிக்கலாம். இவர் பல்வேறு விதத்தில் பந்துவீசும் திறமை பெற்றவர். விசாகப்பட்டன ஆடுகளத்தில் பந்துகள் வேகமாக சுழலும். கவனமாக விளையாடி இங்கிலாந்தின் 'ஸ்பின்னர்'களை இந்தியா சமாளிக்க வேண்டும். ஐதராபாத் போட்டியில் இங்கிலாந்து பேட்டர்கள் 'ஸ்வீப் ஷாட்' மூலம் இந்திய 'சுழலை' சிதறடித்தனர். இம்முறை புதுமையான திட்டங்களுடன் நமது வீரர்கள் களமிறங்க வேண்டும்,''என்றார்.

ரஜத் படிதர் வாய்ப்பு



இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சரண்தீப் சிங் கூறுகையில்,''இங்கிலாந்தை 'காப்பி' அடித்து நான்கு 'ஸ்பின்னர்'களை தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. இரண்டு 'வேகம்', மூன்று 'ஸ்பின்னர்'களுடன் களமிறங்குவது தான் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு பலம். ராகுலுக்கு பதில் ரஜத் படிதர், ஜடேஜாவுக்கு பதில் குல்தீப் என இரு மாற்றம் செய்தால் போதும். 'பேட்டிங்' வரிசையில் மாற்றம் அவசியம். மூன்றாவது இடத்துக்கு சுப்மன் கில் சரிப்பட்டு வரமாட்டார். துவக்கத்தில் ஜெய்ஸ்வால்-சுப்மன் களமிறங்க வேண்டும். சுழற்பந்துவீச்சை சமாளிக்க கூடிய ரோகித் சர்மா மூன்றாவதாக வரலாம்,''என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறுகையில்,''இரண்டாவது டெஸ்டில் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்-சுப்மன் வருவது தான் நல்லது. மூன்றாவது இடத்தில் பேட் செய்வதில் ரோகித்திற்கு எவ்வித பிரச்னையும் இருக்காது,''என்றார்.

எங்கும் 'சுழல்' மயம்



ஐதராபாத் டெஸ்டில் 'பாஸ் பால்' திட்டம் மூலம் அதிரடியாக பேட் செய்தது இங்கிலாந்து. அறிமுக 'ஸ்பின்னர்' ஹார்ட்லி 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு கைகொடுத்தார். 'ஸ்பின்னர்'கள் மூலம் தொடர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளது. அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் கூறுகையில்,''முதல் டெஸ்ட் போல விசாகப்பட்டன ஆடுகளமும் 'ஸ்பின்னர்'களுக்கு சாதகமாக இருந்தால், 5 'ஸ்பின்னர்'களுடன் களமிறங்க தயங்க மாட்டோம். சோயப் பஷிர் வாய்ப்பு பெறலாம்,''என்றார். முழங்கால் காயத்தால் லீச் அவதிப்படுவது பலவீனம். மற்ற 'ஸ்பின்னர்'கள் ஹார்ட்லி, ரூட், ரேகன் அகமது, சோயப் பஷிர் இடம் பெறலாம். 'வேகப்புயல்' மார்க் உட்டிற்கு பதிலாக ஒரு பேட்டரை சேர்க்க வாய்ப்பு உண்டு.

இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறுகையில்,''இந்திய தொடருக்கு சிறந்த 'ஸ்பின்னர்'களை தேர்வு செய்துள்ளோம். இந்த முறை டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு உள்ளது,''என்றார்.

பாய்காட் பாய்ச்சல்



இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் கூறுகையில்,''இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 36 வயதாகிறது. கிரிக்கெட்டின் சிறந்த காலத்தை கடந்து விட்டார். இவரால் பெரிய ஸ்கோரை எட்ட முடிவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய மண்ணில் இரண்டு டெஸ்ட் சதம் தான் அடித்துள்ளார். இந்திய அணியின் 'பீல்டிங்'கும் துடிப்பாக இல்லை. ஐதராபாத் டெஸ்டில், போப் 110 ரன்னில் கொடுத்த 'கேட்ச்சை' கோட்டைவிட்டனர். அவர் கூடுதலாக 86 ரன் சேர்த்து, 196 ரன்னை எட்டினார். இது இந்திய அணியின் தோல்விக்கு வித்திட்டது. கோலி, ஜடேஜா, ஷமி, ரிஷாப் இல்லாதது இங்கிலாந்துக்கு சாதகம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,''என்றார்.






      Dinamalar
      Follow us