/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: இந்தியாவுக்கு 'ஷாக்' * ஹாங்காங் அணியிடம் தோல்வி
/
கால்பந்து: இந்தியாவுக்கு 'ஷாக்' * ஹாங்காங் அணியிடம் தோல்வி
கால்பந்து: இந்தியாவுக்கு 'ஷாக்' * ஹாங்காங் அணியிடம் தோல்வி
கால்பந்து: இந்தியாவுக்கு 'ஷாக்' * ஹாங்காங் அணியிடம் தோல்வி
ADDED : ஜூன் 10, 2025 10:28 PM
கோவ்லுான்: ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி, 0-1 என தரவரிசையில் பின்தங்கிய ஹாங்காங் அணியிடம் தோல்வியடைந்தது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 127 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
தனது முதல் போட்டியில் இந்தியா 'டிரா' (0-0, வங்கதேசம்) செய்ததால், இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
இதில் 153 வது இடத்திலுள்ள ஹாங்காங்கை சந்தித்தது. முதல் பாதியின் 35வது நிமிடத்தில் இந்திய வீரர் லிஸ்டன் கொலாகோ, பந்தை ஆஷிக் குருனியனுக்கு 'பாஸ்' செய்தார். ஹாங்காங் கோல் போஸ்டுக்கு அருகில் இருந்த ஆஷிக், பந்தை கோல் போஸ்டுக்கு வெளியில் அடிக்க, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டாவது பாதியில், 50 வது நிமிடத்தில் பந்தை மீண்டும் வெளியே அடித்து, கோல் வாய்ப்பை வீணடித்தார் ஆஷிக். 56 வது நிமிடத்தில் ஆஷிக்கிற்கு மாற்று வீரராக, 40 வயது சுனில் செத்ரி களமிறங்கினார்.
போட்டியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+5) இந்திய கோல் கீப்பர் பந்தை வெளியே தள்ள பாய்ந்தார். அப்போது எதிரணி வீரர் மீது மோத, 'எல்லோ கார்டு' பெற்றார். ஹாங்காங் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு தரப்பட்டது. இதில் பெரெய்ரா கோல் அடிக்க, இந்திய அணி 0-1 என கடைசி நிமிடத்தில் வீழ்ந்தது.
இப்போட்டியில் இந்தியா வென்றால், ரூ. 43 லட்சம் பரிசு தரப்படும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது. எனினும் தரவரிசையில் 26 இடம் பின்தங்கிய ஹாங்காங்கிடம் தோற்றது, கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இந்த தோல்வி காரணமாக இந்திய அணி தரவரிசையில் 133 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.