/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இன்டர் மயாமி அணி தோல்வி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
/
இன்டர் மயாமி அணி தோல்வி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
இன்டர் மயாமி அணி தோல்வி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
இன்டர் மயாமி அணி தோல்வி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
ADDED : ஜூன் 30, 2025 09:38 PM

அட்லாண்டா: கிளப் உலக கோப்பை கால்பந்து 'ரவுண்டு-16' போட்டியில் மெஸ்சியின் இன்டர் மயாமி அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. பாரிஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்காவில், உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. அட்லாண்டாவில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் இன்டர் மயாமி (அமெரிக்கா), பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிரான்ஸ்) அணிகள் மோதின. இதில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி 4-0 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
பாரிஸ் அணிக்கு ஜோவோ நெவ்ஸ் 2 (6, 39வது நிமிடம்) கோல் அடித்து கைகொடுத்தார். மெஸ்சி (அர்ஜென்டினா), லுாயிஸ் சாரஸ் (உருகுவே) போன்ற உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் இருந்த போதும் இன்டர் மயாமி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் பைனலில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி 5-0 என இன்டர் மயாமி அணியை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தது.
முனிக் வெற்றி: மயாமி கார்டன்சில் நடந்த மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் பேயர்ன் முனிக் (ஜெர்மனி), பிளாமெங்கோ (பிரேசில்) அணிகள் மோதின. இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரி கேன் 2 கோல் (9, 73வது நிமிடம்) அடித்து கைகொடுக்க, பேயர்ன் முனிக் அணி 4-2 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
அட்லாண்டாவில் நடக்கவுள்ள காலிறுதியில் (ஜூலை 5) பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன், பேயர்ன் முனிக் அணிகள் மோதுகின்றன.