/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
காலிறுதியில் ரியல் மாட்ரிட்: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
/
காலிறுதியில் ரியல் மாட்ரிட்: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
காலிறுதியில் ரியல் மாட்ரிட்: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
காலிறுதியில் ரியல் மாட்ரிட்: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
ADDED : ஜூலை 02, 2025 10:33 PM

மயாமி கார்டன்ஸ்: கிளப் உலக கோப்பை கால்பந்து காலிறுதிக்கு ரியல் மாட்ரிட் அணி முன்னேறியது.
அமெரிக்காவில், உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. மயாமி கார்டன்சில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), யுவென்டஸ் (இத்தாலி) அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ரியல் மாட்ரிட் அணிக்கு 54வது நிமிடத்தில் கான்சலோ கார்சியா ஒரு கோல் அடித்தார். இதற்கு, யுவன்டஸ் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
அட்லாண்டாவில் நடந்த மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் போருசியா டார்ட்மண்ட் (ஜெர்மனி), மான்டெர்ரி (மெக்சிகோ) அணிகள் மோதின. இதில் டார்ட்மண்ட் அணி 2-1 என வெற்றி பெற்றது. கிழக்கு ரூதர்போர்டில் நடக்கவுள்ள காலிறுதியில் (ஜூலை 5) ரியல் மாட்ரிட், போருசியா டார்ட்மண்ட் அணிகள் மோதுகின்றன.