/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கோல்கட்டா அணி வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
/
கோல்கட்டா அணி வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
ADDED : ஜூன் 08, 2025 11:37 PM

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் கோல்கட்டா அணி 9-6 என, கோவா அணியை வீழ்த்தியது.
ஆமதாபாத்தில் (குஜராத்), அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோவா, கோல்கட்டா அணிகள் மோதின.
ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய், கோல்கட்டாவின் குவாட்ரி அருணா மோதினர். இதில் ஏமாற்றிய ஹர்மீத் 1-2 என தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் அட்ரியானா டயாஸ் (கோல்கட்டா) 3-0 என, கிரித்விகா சின்ஹா ராயை (கோவா) வீழ்த்தினார்.
கலப்பு இரட்டையர் போட்டியில் கோல்கட்டாவின் அட்ரியானா, அங்கூர் பட்டாசார்ஜி ஜோடி 2-1 என கோவாவின் ஹர்மீத், ஜெங் ஜியான் ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் அங்கூர் பட்டாசார்ஜி (கோல்கட்டா) 2-1 என ரோனித் பன்ஜாவை (கோவா) தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் கோவாவின் ஜெங் ஜியான் 3-0 என செலினாவை (கோல்கட்டா) வென்றார்.
முடிவில் கோல்கட்டா அணி 9-6 என வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 2ல் வென்ற கோல்கட்டா 29 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.