/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெய்ப்பூர்
/
டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெய்ப்பூர்
ADDED : ஜூன் 11, 2025 10:08 PM

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு ஜெய்ப்பூர் அணி முன்னேறியது. லீக் போட்டியில் புனே அணியை வீழ்த்தியது.
ஆமதாபாத்தில் (குஜராத்) அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் புனே, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் புனேயின் அனிர்பன் கோஷ், ஜெய்ப்பூரின் ஜீத் சந்திரா மோதினர். இதில் ஜீத் சந்திரா 2-1 என வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பிரிட் ஏர்லேண்ட் (ஜெய்ப்பூர்) 2-1 என ரீத் ரிஷ்யாவை (புனே) தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் ஜெய்ப்பூரின் பிரிட் ஏர்லேண்ட், ஜீத் சந்திரா ஜோடி 2-1 என புனேயின் ரீத் ரிஷ்யா, அல்வாரோ ரோபிள்ஸ் ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் அல்வாரோ ரோபிள்ஸ் (புனே) 2-1 என யஷான்ஷ் மாலிக்கை (ஜெய்ப்பூர்) வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலா 2-1 என புனேயின் ஜியான் லீயை வென்றார்.
முடிவில் ஜெய்ப்பூர் அணி 10-5 என வெற்றி பெற்றது. ஐந்து போட்டியில், 4ல் வென்ற ஜெய்ப்பூர் அணி 41 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறி, முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது.