sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

மூன்றாவது சுற்றில் சபலென்கா, அல்காரஸ்: விம்பிள்டனில் முன்னேற்றம்

/

மூன்றாவது சுற்றில் சபலென்கா, அல்காரஸ்: விம்பிள்டனில் முன்னேற்றம்

மூன்றாவது சுற்றில் சபலென்கா, அல்காரஸ்: விம்பிள்டனில் முன்னேற்றம்

மூன்றாவது சுற்றில் சபலென்கா, அல்காரஸ்: விம்பிள்டனில் முன்னேற்றம்


UPDATED : ஜூலை 02, 2025 11:02 PM

ADDED : ஜூலை 02, 2025 10:35 PM

Google News

UPDATED : ஜூலை 02, 2025 11:02 PM ADDED : ஜூலை 02, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு சபலென்கா, மடிசன் கீஸ், அல்காரஸ் முன்னேறினர்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்றைய 3ம் நாள் போட்டிகள் மழையால் தாமதமாக துவங்கின. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, செக்குடியரசின் மேரி பவுஸ்கோவா மோதினர். இதில் சபலென்கா 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-4, 6-2 என செர்பியாவின் டானிலோவிச்சை தோற்கடித்தார்.

முதல் சுற்று போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் டயானா யாஸ்டிரெம்ஸ்கா மோதினர். இதில் ஏமாற்றிய கோகோ காப் 6-7, 1-6 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

அல்காரஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பிரிட்டனின் ஆலிவர் டார்வெட் மோதினர். அபாரமாக ஆடிய அல்காரஸ் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் சாதனை: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் அலெக்சாண்ட்ரி முல்லர் மோதினர். இதில் ஜோகோவிச் 6-1, 6-7, 6-2, 6-2 என வெற்றி பெற்றார். கடந்த 2005ல் முதன்முறையாக விம்பிள்டனில் களமிறங்கிய ஜோகோவிச், இதுவரை இங்கு விளையாடிய அனைத்து முதல் சுற்று போட்டியிலும் (20) வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

மற்றொரு முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-7, 7-6, 3-6, 7-6, 4-6 என பிரான்சின் ஆர்தர் ரின்டெர்க்னெச்சிடம் போராடி தோல்வியடைந்து வெளியேறினார்.

பாம்ப்ரி ஜோடி வெற்றி

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி 7-6, 6-4 என மொனாகோவின் ரோமைன் அர்னியோடோ, பிரான்சின் மானுவல் கினார்ட் ஜோடியை வீழ்த்தியது.








      Dinamalar
      Follow us