sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

காலிறுதியில் ஸ்வியாடெக், அல்காரஸ்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

/

காலிறுதியில் ஸ்வியாடெக், அல்காரஸ்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

காலிறுதியில் ஸ்வியாடெக், அல்காரஸ்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

காலிறுதியில் ஸ்வியாடெக், அல்காரஸ்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்


ADDED : ஜூன் 01, 2025 11:54 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு ஸ்வியாடெக், ஸ்விடோலினா, சபலென்கா, அல்காரஸ் உள்ளிட்டோர் முன்னேறினர்.

பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், கஜகஸ்தானின் ரிபாகினா மோதினர். இதில் ஸ்வியாடெக் 1-6, 6-3, 7-5 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி மோதினர். இதில் ஸ்விடோலினா 4-6, 7-6, 6-1 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். சீனாவின் கின்வென் ஜெங் 7-6, 1-6, 6-3 என ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவாவை தோற்கடித்தார்.

பெலாரசின் அரினா சபலென்கா 7-5, 6-3 என அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

அல்காரஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் அமெரிக்காவின் டாமி பால், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் மோதினர். இதில் டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 7-6, 6-3, 4-6, 6-4 என அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

போபண்ணா, பாம்ப்ரி ஏமாற்றம்ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, செக்குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடி 2-6, 6-7 என பின்லாந்தின் ஹெலியோவாரா, பிரிட்டனின் ஹென்ரி பேட்டன் ஜோடியிடம் வீழ்ந்தது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி 4-6, 4-6 என அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன், ஈவன் கிங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஜோகோவிச் '99'

மூன்றாவது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் சிசோலிக் மோதினர். அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என வெற்றி பெற்றார். இது, பிரெஞ்ச் ஓபன் வரலாற்றில் ஜோகோவிச் பெற்ற 99வது வெற்றியானது.








      Dinamalar
      Follow us