/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
சாலை தடுப்பில் மோதிய கார்; தந்தை பலி; இருவர் படுகாயம்
/
சாலை தடுப்பில் மோதிய கார்; தந்தை பலி; இருவர் படுகாயம்
சாலை தடுப்பில் மோதிய கார்; தந்தை பலி; இருவர் படுகாயம்
சாலை தடுப்பில் மோதிய கார்; தந்தை பலி; இருவர் படுகாயம்
ADDED : ஜூன் 17, 2025 01:05 AM

திருமானுார்; அரியலுார் அருகே, மகன் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்தார்.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி, 74. இவரது மகன் பாலசுப்பிரமணியன், 39. திருச்சி மாவட்டம், பெரிய கொடுந்துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன், 42. மூவரும், நேற்று முன்தினம் திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு காரில் சென்றனர்.
பாலசுப்பிரமணியன் காரை ஓட்டினார். திருச்சி-- -- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், சுண்டகுடி பிரிவு பாதை அருகில் கார் வந்தபோது, மீடியனில் மோதியது.
இதில், படுகாயமடைந்த நாராயணசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன் காயமடைந்தனர். கீழப்பழுவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.