/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 14, 2024 01:16 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம் சிறுசேரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
மேலும், சிப்காட்டை சுற்றி புதுப்பாக்கம், படூர், நாவலுார், தாழம்பூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சிப்காட் வழியாக அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட சுற்றியுள்ள பகுதி மக்கள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், சிப்காட் வளாகத்தில் மூன்றாவது குறுக்குத் தெரு இணைப்பு சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு, அதில் கான்கிரீட் கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கான்கிரீட் கற்கள், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும், புதிதாக வரும் வாகன ஓட்டிகளும், இருசக்கர வாகனங்களில் வருவோரும் சாலையின் நடுவில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாற்றம் அடைகின்றனர்.
மேலும், சில வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.