/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
/
கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
ADDED : ஜூன் 01, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, : சிங்கபெருமாள் கோவில் அடுத்த வெண்பாக்கம் கிராமத்தில், சிங்கபெருமாள் கோவில் -- ரெட்டிப்பாளையம் சாலை அருகில் பழமையான முருகன் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம், இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட கிராம மக்கள், பாலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த உண்டியல் திருடப்பட்டது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து, கிராம மக்கள் அளித்த புகாரின்படி, பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.