/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேப்பாட்டி அம்மன் தேரில் வீதியுலா
/
சேப்பாட்டி அம்மன் தேரில் வீதியுலா
ADDED : ஜூலை 14, 2024 01:20 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், நத்தம் பகுதியில் சேப்பாட்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
கடைசியாக 2018ம் ஆண்டு நடத்தப்பட்டது. கடந்த 7ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு நகர சந்திகளுக்கு பூஜை செய்யப்பட்டது.
நேற்று காலை 7:00 மணிக்கு நிலையில் இருந்த தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பெரியநத்தம், ரைட்டர் சபாபதி தெரு, காஞ்சிபுரம் சாலை வழியாக வந்து, நகராட்சி அலுவலகம் அருகில் நிறுத்தப்பட்டது.
இன்று காலை 8:00 மணிக்கு புறப்படும் தேர் அண்ணா சாலை பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக மீண்டும் கோவிலை வந்தடையும். இதில், சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர்.