/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
2 ஆண்டுகளாக இடையூறு கடைகள் இடித்து அகற்றம்; பக்தர்கள் மகிழ்ச்சி
/
2 ஆண்டுகளாக இடையூறு கடைகள் இடித்து அகற்றம்; பக்தர்கள் மகிழ்ச்சி
2 ஆண்டுகளாக இடையூறு கடைகள் இடித்து அகற்றம்; பக்தர்கள் மகிழ்ச்சி
2 ஆண்டுகளாக இடையூறு கடைகள் இடித்து அகற்றம்; பக்தர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 13, 2024 12:46 AM

திருப்போரூர்:திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, விசேஷ நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக உள்ள வடக்கு குளக்கரை, கிழக்கு குளக்கரை, சன்னிதி தெருக்களில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுமதியின்றி தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
இவை பக்தர்களுக்கு இடையூறாகவும், சாலை அகலம் குறுகியதாகவும் இருந்தது.
மேலும், 26 லட்சம் ரூபாய் மதிப்பில், குளத்தின் நான்கு பக்க சுற்றுச் சுவர் கலைநயத்துடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலைநயத்துடன் புனரமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை மறைக்கும் வகையிலும் ஐந்துதற்காலிக கடைகள்ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்தன.
எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் நீண்டகாலமாக கோவில் நிர்வாகத்திற்கு, கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து நம் நாழிதழிலும் தொடர்ச்சியாக செய்தி வெளியிடப்பட்டு வந்தது.
இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் சார்பில் செயல் அலுவலர் குமர வேல் தலைமையில், போலீசார் உதவியுடன் களம் இறங்கி, 80க்கும் மேற்பட்ட தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளைஅகற்றினர்.
தொடர்ந்து இதர ஆக்கிரமிப்பு பணிகளும் நடக்கின்றன. அதேபோல் நீதிமன்ற உத்திரவின் எதிரொலியாக மாடவீதிகளில் உள்ளஆக்கிரமிப்புகளும்வருவாய்த்துறை, பேரூராட்சி நிர்வாகம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
தற்போது, குறுகலாக காணப்பட்ட ரோடு, ஓரே நாளில் விசாலமானதாக மாறியது. இதனால், பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீதிமன்றத்திற்கு நன்றி
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் எதிரே, சன்னதி தெருவில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பெரும் துயரத்தையும், தொல்லையையும் கொடுத்து வந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகன்ற பெரியதெருவின் இருபக்கமும் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தியதோடு ஒரு பக்கம் இருக்க, சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் ஆக்கிரமிப்பு கடை முன்பு நிறுத்தக்கூடாது என அதிகாரத்துடனும், தகாத வார்த்தைகளாலும் திட்டி மக்களின் மனதை புண்படுத்தினர். நிம்மதிக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள், இருக்கின்ற நிம்மதியையும் தொலைத்தனர்.
ஆக்கிரமிப்பு பெண் ரவுடிகளின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டுவந்த நீதிமன்றத்திற்கும், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.