/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விஷ பூச்சிகள் வசிப்பிடமான அரசு பள்ளி கழிப்பறை
/
விஷ பூச்சிகள் வசிப்பிடமான அரசு பள்ளி கழிப்பறை
ADDED : ஜூலை 13, 2024 09:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த பழையனுார் ஊராட்சி ஒன்றிய அரசு நலப் பள்ளியில், 13 மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறை சிதலமடைந்து பயன்பாடின்றி உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை உள்ளது.
மேலும், சிதலமடைந்த கழிப்பறை பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, பயன்பாடற்ற பழைய கழிப்பறையை இடித்து அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.