/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் இடத்தில் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்
/
கோவில் இடத்தில் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்
கோவில் இடத்தில் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்
கோவில் இடத்தில் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்
ADDED : ஜூன் 07, 2024 09:44 PM
சேலையூர்,:ராஜகீழ்ப்பாக்கம் - மாடம்பாக்கம் சாலையில், கோவில் நிலத்தில் அனுமதி பெறாமல், அத்துமீறி கால்வாய் கட்டிய விவகாரத்தில், தாசில்தார், சர்வேயரை கொண்டு, நிலத்தை அளக்க முடிவு செய்துள்ளனர்.
தாம்பரம் - வேளச்சேரி சாலையில், ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது, ராஜகீழ்ப்பாக்கம் - மாடம்பாக்கம் சாலை.
தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் இச்சாலையில், ராஜகீழ்பாக்கம் சிக்னலில் இருந்து கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் வரை, சாலை விரிவாக்கம் செய்யும் பணி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தவிர, மழைநீர் கால்வாயையும் வளைத்து வளைத்து கட்டி வருகின்றனர்.
கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், அத்துமீறி கால்வாய் கட்டியுள்ளனர்.
இதையறிந்த கோவில் நிர்வாகம், அனுமதி பெறாமல் கட்டியதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் எழுதினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கால்வாய் கட்டப்பட்டுள்ள இடத்தில் தாசில்தார், சர்வேயரை கொண்டு, நிலத்தை அளக்க, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.