/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை பயோ காஸ் செயல்பாடு அணுசக்தி துறை பொறியாளர் சோதனை
/
மாமல்லை பயோ காஸ் செயல்பாடு அணுசக்தி துறை பொறியாளர் சோதனை
மாமல்லை பயோ காஸ் செயல்பாடு அணுசக்தி துறை பொறியாளர் சோதனை
மாமல்லை பயோ காஸ் செயல்பாடு அணுசக்தி துறை பொறியாளர் சோதனை
ADDED : ஜூலை 14, 2024 01:07 AM

மாமல்லபுரம்:புதுப்பட்டினம் ஊராட்சி, அணுசக்தி துறை கல்பாக்கம் நகரிய பகுதியுடன் ஒருங்கிணைந்ததாக உள்ளது. நகரிய பகுதியை, அணுசக்தி துறை நிர்வாகமும், புதுப்பட்டினம் பகுதியை ஊராட்சி நிர்வாகமும் நிர்வகித்து வருகிறது.
புதுப்பட்டினத்தில் அதிகரிக்கும் காய்கறி, மீன், இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கழிவு களிலிருந்து பயோ காஸ் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்த, ஊராட்சி தலைவர் காயத்ரி, அணுசக்தி துறையிடம் வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து, அத்துறையின் பொதுப்பணி சேவைகள் பிரிவு, 60 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தது. திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகமும் ஒப்புதல் அளித்தது. ஊராட்சி பகுதியில், 150 கன மீட்டர் கொள்ளளவு கலனுடன், பயோ காஸ் உற்பத்தி பிளான்ட் அமைக்கவும், 28 கிலோ எரிவாயு உற்பத்தி செய்து, அதன் வாயிலாக, 15 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதை செயல்படுத்த, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பயோ காஸ் உற்பத்தி பிளான்டை, அணுசக்தி துறை ஜி.எஸ்.ஓ., பொறியாளர் கனகராஜ், நேற்று பார்வையிட்டார்.
உணவு, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை அரைத்து, கலனில் இட்டுள்ள சாணம் வாயிலாக நொதிக்க வைத்து, மீத்தேன் வாயு உருவாவது, அதை எரிவாயுவாக மாற்றி, ஜெனரேட்டர் இயக்கி, மின்சாரம் உற்பத்தி செய்யும் நடைமுறைகள் குறித்து, ஹேண்ட் இன் ஹேண்ட் ஊழியர் கண்ணதாசன் விளக்கினார்.