/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெற்குணத்தில் செயல்படாமல் வீணாகும் முருங்கை நர்சரி
/
நெற்குணத்தில் செயல்படாமல் வீணாகும் முருங்கை நர்சரி
நெற்குணத்தில் செயல்படாமல் வீணாகும் முருங்கை நர்சரி
நெற்குணத்தில் செயல்படாமல் வீணாகும் முருங்கை நர்சரி
ADDED : ஜூன் 01, 2024 04:43 AM

சித்தாமூர் : சித்தாமூர் அருகே நெற்குணம் ஊராட்சியில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஊராட்சி வாயிலாக முருங்கை நாற்று தயார் செய்து, கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டது.
கடந்த ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அனைத்து கிராம அண்ணாமறுமலர்ச்சித் திட்டத்தில்,முருங்கை நாற்றங்கால் பண்ணை கூடாரம்,5.80 லட்சம் ரூபாய்மதிப்பில் அமைக்கப்பட்டது.
தற்போது வரை, முருங்கை நாற்று உற்பத்தி பணி துவங்கப்படாததால், பண்ணையில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் நிழல்வலை கூடாரம் பராமரிப்பின்றி, காற்றில் கிழிந்து வீணாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, முருங்கை நர்சரியைசீரமைத்து, நாற்று உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.