/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கத்தில் புதிய மேம்பாலம்
/
கிளாம்பாக்கத்தில் புதிய மேம்பாலம்
ADDED : ஜூன் 01, 2024 06:05 AM
சென்னை : வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 2023 டிச., 30ல் திறக்கப்பட்டது. இங்கு, செங்கல்பட்டு மார்கத்தில் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள் இந்த வளாகத்துக்கு வருவதற்கு உரிய வழி இல்லை. இதே போன்று, இங்குள்ள மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் ஊரப்பாக்கம் அயனஞ்சேரி வரை சென்று திரும்ப வேண்டியுள்ளது.
இதற்கு தீர்வாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்துார் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
மேம்பால கட்டுமான பணிகள் முடியும் வரை, இங்கு வாகனங்கள் சிக்கல் இன்றி செல்ல சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, செங்கல்பட்டு மார்கத்தில் இருந்து வரும் பேருந்துகள், பேருந்து நிலைய நுழைவாயிலுக்கு எதிரிலும், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள், நுழைவாயில் எதிரிலேயே ஜி.எஸ்.டி., சாலையை கடக்க ஏற்பாடு செய்யப்படும்.
பாதசாரிகள் சாலையை கடக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.