/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் வாலிபர் பலி
/
ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் வாலிபர் பலி
ADDED : ஜூன் 01, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார்:பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகே, நேற்று காலை, தண்டவாளத்தை கடக்க முயன்ற, வடமாநில நபர், ரயில் மோதி இறந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபு ராம், 25, என்பதும், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.