/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துணை சுகாதார நிலைய கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
/
துணை சுகாதார நிலைய கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
துணை சுகாதார நிலைய கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
துணை சுகாதார நிலைய கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : மார் 11, 2025 06:37 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மொறப்பாக்கம் ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடம், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு 59 ஊராட்சிகள் உள்ளன.
அதில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
மக்கள் தொகையின் அடிப்படையில், அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் எல்.எண்டத்துார், ஒரத்தி, ராமாபுரம் ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 59 ஊராட்சிகளில், 27 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அதில், 27 துணை சுகாதார நிலையங்களுக்கும் 20க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மொறப்பாக்கம் ஊராட்சியில், 15வது நிதி குழு மானியம் 2022 -- 23ல், சுகாதார மானியம் திட்டத்தின் கீழ், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
கட்டடம் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிவுற்று, ஊராட்சி தலைவர் வசந்தி, ராமாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெய தீபா ஆகியோர் பங்கேற்று, இந்த கட்டடத்தை நேற்று, மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.
அதனால் மொறப்பாக்கம், அருந்ததிபாளையம், சின்னகருணாகரவிளாகம், புதுார், கூடலுார், கழனிப்பாக்கம், அபிராமிபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன் பெறுவர்.