/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்படுத்த லாயக்கற்ற சாலை மதுராபுதுார்வாசிகள் அவஸ்தை
/
பயன்படுத்த லாயக்கற்ற சாலை மதுராபுதுார்வாசிகள் அவஸ்தை
பயன்படுத்த லாயக்கற்ற சாலை மதுராபுதுார்வாசிகள் அவஸ்தை
பயன்படுத்த லாயக்கற்ற சாலை மதுராபுதுார்வாசிகள் அவஸ்தை
ADDED : ஜூலை 18, 2024 12:51 AM

சித்தாமூர்:சூணாம்பேடு அருகே மதுராபுதுார் - ஈசூர் இடையே செல்லும், 3 கி.மீ., தார் சாலை உள்ளது. இந்த சாலையை, சிறுநகர், ஈசூர், கயப்பாக்கம், குமுளி ஆகிய கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக, சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு காணப்படுவதால், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும், விவசாயப் பணிக்கு செல்லும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்களால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதாக குற்றம் சாட்டுகின்றனர். சாலை பழுதடைந்து பயன்படுத்த லாயக்கற்றதாக மாறி உள்ளதால், தினசரி சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.