/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
20 எஸ்.ஐ., உட்பட 119 பேர் செங்கையில் பணியிட மாற்றம்
/
20 எஸ்.ஐ., உட்பட 119 பேர் செங்கையில் பணியிட மாற்றம்
20 எஸ்.ஐ., உட்பட 119 பேர் செங்கையில் பணியிட மாற்றம்
20 எஸ்.ஐ., உட்பட 119 பேர் செங்கையில் பணியிட மாற்றம்
ADDED : ஜன 26, 2024 12:23 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், லோக்சபா தேர்தலையொட்டி, சப்- - இன்ஸ்பெக்டர் 20 பேர் உட்பட, 119 போலீசாரை பணியிட மாற்றம் செய்து, எஸ்.பி., சாய் பிரணீத் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணைக்கோட்டங்களில், 20 காவல் நிலையங்கள் உள்ளன.
அதோடு, செங்கல்பட்டு, மேல்மருவத்துார், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில், அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு பிரிவு என, ஆறு காவல் நிலையங்கள் என, மொத்தம் 26 காவல் நிலையங்கள் உள்ளன.
இந்த காவல் நிலையங்களில், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை பணியிட மாற்றம் செய்வது வழக்கம். தற்போது, லோக்சபா தேர்தல் வருவதையொட்டி, போலீசாரை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 20 சப்- - இன்ஸ்பெக்டர்கள், 30 சிறப்பு சப்- - இன்ஸ்பெக்டர்கள், 69 போலீசார் என, 119 பேரை பணியிட மாற்றம் செய்து, எஸ்.பி., சாய் பிரணீத் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

