/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியரசு தின விழா நிகழ்ச்சி ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
/
குடியரசு தின விழா நிகழ்ச்சி ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
குடியரசு தின விழா நிகழ்ச்சி ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
குடியரசு தின விழா நிகழ்ச்சி ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
ADDED : ஜன 27, 2024 12:14 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், 75வது குடியரசு தின விழா, நேற்று நடந்தது. கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
அதன்பின், கலெக்டர் ராகுல்நாத், எஸ்.பி., சாய் பிரணீத் ஆகியோர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, பல்வேறு துறைகளின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்களில், 43 பயனாளிகளுக்கு, 15.03 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சரின் காவலர் பதக்கம் 17 போலீசாருக்கு வழங்கப்பட்டது. வருவாய்த்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய 377 அலுவலர்களை பாராட்டி நற்சான்று விருது அளிக்கப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், சிறந்த மருத்துவமனை களாக செயல்பட்ட, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி ஆகிய மருத்துவமனைகளுக்கு, நற்சான்றிதழ்களை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
மேலும், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதியில் உள்ள அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதிகளின் செங்கல்பட்டு போதக காப்பாளர் சீனுவாசராகவனுக்கு, முதல் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்பட்டது.
தாம்பரம் இடைநிலை காப்பாளர் முருகேசனுக்கு, இரண்டாம் பரிசாக 5,௦௦௦ ரூபாய்; தாம்பரம் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவியர் விடுதி போதக காப்பாளர் பொற்செல்விக்கு, 3,௦௦௦ ரூபாய் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கூடுதல் கலெக்டர் அனாமிகா, சப்- - கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

