/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 சிறுமியருக்கு வன்கொடுமை 45 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை
/
3 சிறுமியருக்கு வன்கொடுமை 45 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை
3 சிறுமியருக்கு வன்கொடுமை 45 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை
3 சிறுமியருக்கு வன்கொடுமை 45 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : பிப் 29, 2024 11:13 PM
சென்னை:மூன்று சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமியரை, அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபர், கடந்த 2019ல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில், பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்தவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றம் சாட்டப்பட்டவர் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 57,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்சம் ரூபாயை, அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

