/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் சாலையில் லாரி மோதி மாடு காயம்
/
திருப்போரூர் சாலையில் லாரி மோதி மாடு காயம்
ADDED : ஜன 09, 2024 10:48 PM
திருப்போரூர்:திருப்போரூர் ரவுண்டானாவையொட்டி, நேற்று மாலை 3:30 மணிக்கு, மாடு ஒன்று படுத்திருந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற தனியார் நிறுவன லாரி, மாட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
விபத்தில், மாட்டிற்கு கால் மற்றும் மற்ற பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
அங்கிருந்த பொதுமக்கள் மாட்டிற்கு முதலுதவி சிகிச்சை செய்து, சாலைப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
திருப்போரூர் பகுதியில், ஏராளமான மாடுகள் சாலையில் உலவுகின்றன. வாகன ஓட்டிகள் கவனக்குறைவால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

