/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிமென்ட் கல் சாலை பணி கடமலைப்புத்துாரில் துவக்கம்
/
சிமென்ட் கல் சாலை பணி கடமலைப்புத்துாரில் துவக்கம்
ADDED : ஜூன் 26, 2025 01:55 AM

அச்சிறுபாக்கம், :கடமலைப்புதுார் ஊராட்சியில் 10 லட்சம் ரூபாயில், சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் கடமலைப்புத்துார் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், மாரியம்மன் கோவில் தெருவில், 15 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
நாளடைவில், சேதமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. அப்பகுதி மக்கள், ஊராட்சி மன்ற தலைவரிடம், சிமென்ட் கல் சாலை அமைக்க மனு அளித்து வந்தனர்.
ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பழைய சிமென்ட் சாலை இடித்து சமன்படுத்தி, தற்போது, சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.