/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மத்திய அரசு வங்கி கடன்கள் விழிப்புணர்வு
/
மத்திய அரசு வங்கி கடன்கள் விழிப்புணர்வு
ADDED : ஜன 26, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மத்திய அரசின் 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' நிகழ்ச்சி, இந்தியன் வங்கி சார்பில், மாமல்லபுரத்தில் நேற்று நடத்தப்பட்டது.
மத்திய நிதி சேவைகள் இயக்குனர் வி.வி.எஸ்.கராயத், வங்கிகளில், பிரதம மந்திரி கடன், முத்ரா கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்குவது, ஆயுஷ்மான் காப்பீடு, இலவச கேஸ் இணைப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.
இதற்கு முன் கடன் பெற்றவர்கள், அடைந்த பயன்கள் குறித்து கேட்டறிந்தார். ஐந்து பேருக்கு தலா 10,000 ரூபாய் கடன், நான்கு பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு இந்தியன் வங்கி மேலாளர் விஜயகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொது மேலாளர் ரோஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

