ADDED : ஜூன் 01, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர் செய்யூர் அடுத்த தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகள் குணஸ்ரீ, 19; தனியார் கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் உறங்கினர். இரவு 11:30 மணியளவில் குணஸ்ரீ மயங்கிய நிலையில் இருப்பதை கண்ட குடும்பத்தினர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குணஸ்ரீ விஷம் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். செய்யூர் போலீசார் சடலத்தை பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.