sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புறநகர் ஊராட்சிகளில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

/

புறநகர் ஊராட்சிகளில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

புறநகர் ஊராட்சிகளில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

புறநகர் ஊராட்சிகளில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்


ADDED : ஜூன் 09, 2025 01:46 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியை ஒட்டி, பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், வேங்கைவாசல், நன்மங்கலம் உள்ளிட்ட, 15 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் வரை, விவசாயம் செழிப்பாக இருந்தது.

நகரமயமாதல் மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சியால், இப்பகுதிகளில் விவசாயம் பெருமளவு குறைந்தது. எனினும், இக்கிராமங்களில், விவசாய கிணறுகள் இன்றும் அப்படியே உள்ளன.

இந்த கிணறுகளில் இருந்து, பல ஆண்டுகளாக தண்ணீர் உறிஞ்சி எடுத்து, டேங்கர் லாரிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் விற்கும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக, நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு, பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த கிராம மக்களுக்கே அடிப்படை தேவைக்கு தண்ணீர் கிடைக்காத நிலைமை உருவாகி, பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நாட்களாக, இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால், நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

எனினும், இதே நிலைமை நீடித்தால், வேங்கைவாசல் மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதிகளில், அடுத்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து, இப்பகுதிவாசிகள் வெளி இடங்களில் தண்ணீர் வாங்கும் சூழல் ஏற்படும்.

அதனால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இக்கிராமங்களை காப்பாற்ற முடியும்.

இது குறித்து, தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க மாநில செயலர் ஜி.தினகரன், 43, கூறியதாவது:

விவசாய கிணறுகளில் இருந்து வணிக ரீதியான பயன்பாட்டிற்கு, தண்ணீர் எடுக்கக்கூடாது என, நீதிமன்ற தீர்ப்பே உள்ளது. தண்ணீர் திருடும் நபர்கள் மீது, திருட்டு வழக்கு பதிவு செய்யுமாறும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அதையும் மீறி, வேங்கைவாசல் உள்ளிட்ட பகுதிகளில், ஒவ்வொரு கிணறுகளில் இருந்தும், நாள் ஒன்றுக்கு, 10 லோடு தண்ணீர் திருடுகின்றனர்.

நீர்வளம், போலீஸ், வருவாய் துறையினருக்கு தெரிந்து தான் திருட்டு நடக்கிறது. அவர்கள், இதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், துணைபோகின்றனர்.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் முதல் தலைமை செயலர் வரை, எத்தனையோ முறை மனு கொடுத்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்படியே போனால், வளர்ந்து வரும் இப்பகுதிகளில், அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டண விவரம்

தண்ணீர் அளவு லிட்டரில் விலை ரூபாயில்5,000 500 - 100012,000 1,500 - 2,00023,000 3,00036,000 5,000



திருட்டு நடக்கும் பகுதிகள்


வேங்கைவாசல்
கோவிலாஞ்சேரி
நன்மங்கலம்
கோவிலம்பாக்கம்
மதுரப்பாக்கம்
மேடவாக்கம்
வண்டலுார்ஒட்டியம்பாக்கம்மணலிமாத்துார்மஞ்சம்பாக்கம்



தடையில்லா சான்றுவழங்கியது எப்படி?


திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், விளங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்குப்பம், மல்லிமாநகர், தர்காஷ், நியூ ஸ்டார் சிட்டி, கண்ணம்பாளையம் மற்றும் சென்றம்பாக்கம் கிராமம் வழியாக செல்லக்கூடிய கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கடந்தாண்டு ஜூன் மாதம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், சமூக ஆர்வலர் செல்வம் மீரான் புகார் மனு அளித்துள்ளார்.இது குறித்து கேட்டபோது, பொன்னேரி வட்டாட்சியர், 'இந்த கால்வாயானது நீர்வளத்துறைக்கு சொந்தமான கால்வாய்' என, தெரிவித்துள்ளார்.
ஆனால், நீர்வளத்துறை அதிகாரிகள், 'இந்த கால்வாயானது புழல் ஏரியின் பாசன கால்வாயாக இருந்தது எனவும், மேற்படி புழல் ஏரியின் பாசன ஆதாரங்கள் கடந்த 1962ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டதால், இந்த கால்வாயானது மழை நீர் கால்வாயாக மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்றும், அந்த கால்வாயானது நீர்வளத் துறையால் பராமரிக்கப்படுவதில்லை' எனவும் கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தனர்.1962ம் ஆண்டு முதல் இந்த கால்வாயானது நீர்வளத்துறையின் பயன்பாட்டின் கீழ் இல்லை என்றால், இந்த கால்வாய் செல்லக்கூடிய பகுதிகளில் அமைக்கப் படும் மனை பிரிவுகள் மற்றும் கட்டடங்களுக்கு தடையில்லா சான்றிதழ்கள், நீர்வளத்துறை சார்பில் எப்படி வழங்கப்பட்டது என, அப்பகுதிவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.








      Dinamalar
      Follow us